ஆர்டர் பண்ணது 300 ரூபா 'லோஷன்'... ஆனா வந்து சேந்தது 19,000 ரூபா 'ஹெட்போன்'... பதிலுக்கு 'அமேசான்' சொன்னது தான் 'அல்டிமேட்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜோஷ் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனரான கவுதம் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் அமேசானில் ஆன்லைன் ஷாப்பிங் செய்தது குறித்த பதிவு ஒன்றை வெளியிட அது இணையத்தளங்களில் வைரலானது.

காரணம், கவுதம் அமேசான் மூலம் 300 ரூபாய் மதிப்பிலான தோல் லோஷன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு கிட்டத்தட்ட 19,000 ரூபாய் மதிப்புள்ள போஸ் ஹெட்போன் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் அமேசான் வாடிக்கையாளர் மையத்தில் தெரிவித்த நிலையில், அவர்கள் ஒரு முறை டெலிவரான பொருளை திரும்பி வாங்க மாட்டோம் என்றும், அதனால் அதை திருப்பி அனுப்பாமல்
தாங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் வினோதமான இந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சில மணி நேரங்களில் வைரலானது.300 ரூபாய் பொருள் ஆர்டர் செய்த இடத்தில் 19,000 கிடைத்ததால் பலர் தங்களுக்கு இப்படி நடக்காதா என வேதனையுடன் கமெண்ட் செய்தனர். இன்னும் சிலர், தாங்கள் விலை மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்த போது அதற்கு பதில் தவறுதலாக வேறு பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைத்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்
அதே போல், ஒருவர் நான் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்தேன். ஆனால் அதற்கு பதிலாக தோல் லோஷன் கிடைத்துள்ளது. நாம் பரிமாறிக் கொள்ளலாமா என கேட்டுள்ளார். ஆனால், அமேசான் இதை எப்படி ஈடு செய்து கொள்ளும் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.
Bose wireless earbuds (₹19k) delivered instead of skin lotion (₹300). @amazonIN support asked to keep it as order was non-returnable! 🤪🤦♂️🥳 pic.twitter.com/nCMw9z80pW
— Gautam Rege (@gautamrege) June 10, 2020

மற்ற செய்திகள்
