இரவில் கேட்ட 'திடீர்' சத்தம்... தீக்கு இரையாகி 'திகுதிகுவென' பற்றியெரிந்த வீடுகள்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரவில் திடீரென வீடு பற்றியெரிய அதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மணி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று வேலைக்கு சென்ற இடத்தில் அங்கேயே தங்கி விட்டார். இதனால் அவரது வீட்டில் யாருமில்லை. இந்த நிலையில் நேற்று இரவில் திடீரென அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.
அப்போது திடீரென அங்கிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சிலிண்டரின் பாகங்கள் 100 மீட்டர் தூரத்துக்கு சிதறின. தொடர்ந்து தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. ஒருவரின் வீடு கான்கிரீட் என்பதால் தப்பியது. மற்ற மூவரின் வீடுகள் குடிசை என்பதால் தீ மளமளவென்று பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் மணியின் வீட்டில் வெடிக்காமல் இருந்த சிலிண்டரையும் எடுத்துச்சென்று அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
