'அமெரிக்காவில் கலக்கிய இந்திய டாக்டர்...' 'கொரோனா வந்து 2 நுரையீரல்களும் அஃபெக்ட் ஆயிருக்கு...' வெற்றிகரமாக இந்த ட்ரீட்மென்ட் மூலமா தான் காப்பாத்திருக்கார்...!
முகப்பு > செய்திகள் > உலகம்மீரட்டை தாய்மண்ணாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்படைந்த 20 வயது பெண்ணுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உருவாகிய சீனாவை விட அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதுவரை சுமார் 20 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். இந்நிலையில் சிகாகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 20 வயது பெண்க்கு இரண்டு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பெண்ணின் உயிருக்கே ஆபத்து என்று அறிவித்த நிலையில், மூளைச்சாவு அடைந்த ஒருவரது நுரையீரல்களை அந்த இளம்பெண்ணுக்கு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக செய்து முடித்து தற்போது இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் அன்கித் பரத். அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பின் நடைபெற்ற முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தெரிவித்துள்ள மருத்துவர் பரத், இதுவரை நான் செய்த அறுவை சிகிச்சைகளிலே இந்த சிகிச்சைதான் மிகவும் சிரமமானதாக இருந்தது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு இது போன்ற சிகிச்சைகள் இனி அடிக்கடி நடக்க வாய்ப்புள்ளது. கொரோனா வைரசால் அந்த பெண்ணுக்கு நுரையீரல்கள் செயலிழந்து, இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இதயத்தின் செயல்பாடும் குறைந்தது. இறுதியில் அவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் பரத்துக்கு பலரும் இணையத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.