இலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்ச..! வெளியான தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 20, 2019 08:41 PM

இலங்கை நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sri Lanka\'s new President names brother Mahinda Rajapaksa as PM

கடந்த சனிக்கிழமை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் இலங்கை பொதுஜன முன்னணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபரும், கோத்தபய ராஜபக்சவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ச பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அவர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #SRILANKA #MAHINDARAJAPAKSA #PRESIDENT