‘இன்னும் 2 வருஷத்துக்கு ரெஸ்ட் கிடையாது’.. ஓய்வு முடிவிலிருந்து ‘யு-டர்ன்’ அடித்த பிரபல வீரர்.. ‘உற்சாகத்தில் ரசிகர்கள்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 20, 2019 07:16 PM

அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்த லசித் மலிங்கா தற்போது தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Srilankan Cricketer Lasith Malinga Does A U turn On Retirement

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற விரும்புவதாக இலங்கை வீரர் லசித் மலிங்கா முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இன்னும் 2 ஆண்டுகளுக்கு அணிக்கு தன்னால் சிறப்பான பங்களிப்பை தர முடியும் என்பதால் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள மலிங்கா, “நிறைய டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதால் கேப்டனாகவும், வீரராகவும் என்னால் டி20 கிரிக்கெட்டில் தொடர முடியும். 4 ஓவர்கள் தான் வீசப்போகிறோம். அதனால் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடக் கூடிய உடல் தெம்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் மலிங்கா அணியின் கேப்டனாக இருப்பாரா என்பது குறித்து இலங்கை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை.

Tags : #SRILANKA #CRICKET #LASITHMALINGA #RETIREMENT