'எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வர கூடாது'... 'அந்த பையன் FLIGHT டயர்ல ஏறுனான்'... 'அடுத்த நொடி நடந்த கோரம்'... யார் இந்த சிவப்பு ஜெர்சி நாயகன்?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த துயரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்சியைத் தூக்கி எறிந்த தாலிபான்கள் துப்பாக்கி மூலம் புதிய ஆட்சியை அமைத்துள்ளார்கள். இதனால் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் உலக அரங்கைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் நாலாபுறமும் ஓடுவது, பெண்கள் உயிருக்கு பயந்து வீட்டிற்குள் முடங்குவது, பத்திரிகையாளர்கள் இனிமேல் என்ன நடக்க போகிறதோ என்ற அதிர்ச்சியில் செய்தி சேகரிக்கச் செல்வது என பெரும் அசாதாரண நிலை ஆப்கானில் நிலவுகிறது.
அந்த வகையில் தாலிபான்களுக்குப் பயந்து அப்பாவி பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் கடந்த ஞாயிறன்று குவிந்தனர். அப்போது சிலர் அந்த விமானத்தின் டயர் பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர். ஆனால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அதில் மூவர் தவறி விழுந்து பரிதாபமாகப் பலியானார்கள். அதில் ஒருவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த 19 வயதான சாகி அன்வாரி என்ற இளைஞரும் ஒருவர். இவர் ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடியவர். ஆப்கானில் தாலிபான்களின் ஆட்சிக்குப் பயந்து அங்கிருந்து பலர் விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். அவ்வாறு பயணம் செய்து உயிரிழந்தவர்களில் சாகி அன்வாரியும் ஒருவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
சாகி அன்வாரி மரணமடைந்ததை 'The General Directorate of Physical Education and Sports of Afghanistan' அமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இளம் கால்பந்து வீரரின் மறைவுக்கு சக வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், காபூலிலிருந்து புறப்பட்ட அந்த அமெரிக்கச் சரக்கு விமானத்திலிருந்து மனிதர்கள் கீழே விழுவது புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியாகி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
