ONLINE FOOD | ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த பெண்.. வாசலில் டெலிவரி பாய் ஆக பார்சலுடன் நின்ற போலீஸ்.. சுவாரஸ்ய சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jan 31, 2022 12:36 PM

அமெரிக்கா : உணவு டெலிவரி செய்ய போலீஸ் ஒருவரே உணவு பொட்டலத்துடன் வீடு தேடி வந்த சம்பவம், பலரையும் நெகிழ செய்துள்ளது.

america police officer deliver food after arresting delivery boy

"கள்ளக்காதலிய வீட்டுக்கே அழைச்சிட்டு வருவியா?".. கோபத்துல அடிச்சே கொன்ற மனைவியால் பரபரப்பு! என்ன நடந்தது?

உலகளவில் இன்று ஆன்லைன் மூலம் உடை, அணிகலன்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை ஆர்டர் செய்யும் வழக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, நம்மால் உடல் நிலை முடியாமல் போனாலோ, அல்லது வேலையின் காரணமாக சமையலில் கவனம் செலுத்த முடியாமல் போனாலோ ஆன்லைன் மூலம் உணவினை ஆர்டர் செய்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி, தங்களின் பசியையும் போக்கிக் கொள்கின்றனர்.

ஆன்லைனில் உணவு ஆர்டர்

அப்படி, அமெரிக்காவின் தெற்கு டகோட்டா என்னும் மாகாணத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னுடைய மதிய உணவினை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது, சிறிது நேரத்திற்கு பிறகு, வீட்டின் காலிங் பெல் சத்தமும் கேட்டுள்ளது.

 america police officer deliver food after arresting delivery boy

வாசலில் நின்ற போலீஸ்

தான் ஆர்டர் செய்த உணவினை கொடுத்து செல்வதற்காக, டெலிவரி பாய் தான் வந்திருப்பார் என கதவை திறந்து பார்த்த பெண்ணிற்கு, ஆச்சரியம் காத்திருந்தது. தான் ஆர்டர் செய்த உணவு வந்த நிலையில், அதனைக் கொண்டு வந்த நபரின் மூலம் தான் அந்த பெண் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார். ஆம். போலீஸ் அதிகாரி ஒருவர் தான் அந்த பெண்ணிற்கு உணவு டெலிவரி செய்ய வந்துள்ளார்.

போலீஸ் சொன்ன காரணம்

வாசலில் உணவுடன் போலீஸ் ஒருவரை பார்த்ததும், அந்த பெண் திகைத்து போயுள்ளார். புஹர் என்ற அந்த போலீஸ்காரர், 'நீங்கள் எதிர்பார்த்த ஆள் நான் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், உங்களுக்கு உணவு டெலிவரி செய்ய வந்த நபர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதால்  கைது செய்யப்பட்டார். இதனால் நானே உங்களின் உணவை டெலிவரி செய்ய வந்தேன்' என சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

 america police officer deliver food after arresting delivery boy

வைரல் வீடியோ

தொடர்ந்து அந்த பெண்ணும், சிரித்துக் கொண்டே, பார்சலை வாங்கிக் கொண்டு, போலிஸுக்கு நன்றியும் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. உணவு டெலிவரி செய்ய வேண்டியது என்பது போலீசாரின் வேலை அல்ல.

பாராட்டும் மக்கள்

ஆனால், ஒரு வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்ய போன நபர், போக்குவரத்து வீதிமீறலின் பெயரில் கைது செய்யப்பட்டதால், அந்த உணவு வீணாகி விடக் கூடாது என்றும், சம்மந்தப்பட்ட நபர் பசியில் அவதிப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், போலீசாரே உணவு டெலிவரி செய்துள்ள சம்பவம், பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

போலீஸ் என்றாலே கண்டிப்பாக தான் இருப்பார் என்ற நிலையில், சிரித்துக் கொண்டே உணவை டெலிவரி செய்த புஹர் என்ற போலீசாரின் செயல், பலரையும் நெகிழச் செய்துள்ளது.

ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்.. ரூ. 3200 கோடி பரிசு.. ஆனா, அத வாங்குறதுக்கு தான் ஆள் இல்லை.. இப்டி ஒரு ட்விஸ்டா??

Tags : #ONLINE FOOD #AMERICA POLICE OFFICER DELIVER FOOD #DELIVERY BOY #அமெரிக்கா #உணவு டெலிவரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. America police officer deliver food after arresting delivery boy | World News.