அமெரிக்காவில் பெற்ற மகளையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை... காரணத்தைக் கேட்டு திகைத்து போன போலீஸ்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தான் பெற்ற மகளையே தந்தை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியினரை அச்சத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் தனது வீட்டுக்குள் நுழைவது மகள் எனத் தெரியாமல் தந்தை ஒருவரே சுட்டுக் கொன்றுள்ளார். வீட்டுக்குள் வேறு யாரோ நுழையப் பார்க்கிறார்கள் என நினைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே அவரது 16 வயது மகள் உயிரிழந்தார்.
மகள் இறந்துவிட்டது தெரியாமல் அவரது தாய் உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளார். காலை 4.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் விசாரணையில் தந்தை தெரியாமல் தனது மகளை சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகள் விழித்துக் கொள்வாள் என பெற்றோர் மகளை தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தது அங்கு இருந்தவர்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது.
அவசர உதவியில் இருந்து வந்தவர்கள் மருத்துவமனைக்கு இறந்த மகளை கொண்டு சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். ஒஹாயோவில் உள்ள ஹரிஸ்டன் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பள்ளிக்குழு சார்பில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவ தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை இல்லை. துப்பாக்கி லைசென்ஸ் அமெரிக்காவில் பலரிடமும் இருக்கிறது. இதே பகுதியில் டிசம்பர் 7-ம் தேதி 6 வயது மற்றும் 9 வயது குழந்தைகள் உட்பட 22 வயது நபர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதே மாவட்டத்தில் 2 மாணவர்கள் இன்னும் சில நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லைப்பட்டனர்.
இதுபோல் 2021-ம் ஆண்டு அதிகப்படியான சம்பங்கள் நடந்துள்ளன. அத்தனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களே. துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் அமெரிக்காவில் கொரோனா காலத்துக்குப் பின்னரே இது போன்ற சம்பங்கள் அதிகப்படியாக நடப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த 2021-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 44 ஆயிரம் பேர் துப்பாக்கியால் உயிர் இழந்துள்ளனர். இதில் 1,517 பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.