'இவருக்கு இதே வேலையா போச்சு'!.. திரும்பவும் சர்ச்சைக்குள்ளான ‘ட்ரம்ப்’ ட்வீட்..!.. ‘ஆக்ஷனில்’ இறங்கிய ட்விட்டர்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே “தேர்தல் முடிவுகள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் பெரும் வெற்றியை எதிர்நோக்குகிறோம். ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்கிறார்கள். ஒருபோதும் விடமாட்டோம். வாக்கு சாவடிகளை மூடிய பின் வாக்களிக்க முடியாது” என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டார்.
ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் அவசர அவசரமாக, “இன்று இரவு நான் ஓர் அறிக்கையினை வெளியிடுவேன். மாபெரும் வெற்றி!” என டிரம்ப் ட்விட்டரில் டிரம்ப் வீரமுழக்கம் முழங்கினார்.
இந்நிலையில், எதிர்கட்சிகள் சதி செய்வதாக டிரம்ப் கூறி, பதிவிட்ட சர்ச்சைக்குரிய அந்த பதிவினை, “சர்ச்சைக்குரியது” என்றும், “நாங்கள்தான் பெரியவர்கள், ஆனால் அவர்கள் தேர்தலைத் தடுக்க முற்படுகிறார்கள்” என்று ஆதாரமற்ற முறையில் டிரம்ப் கூறியிருப்பதாகவும் ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “இந்த ட்வீட்டின் உள்ளடக்கங்களும் சர்ச்சைக்குரியவை, தேர்தலில் செயல்பாட்டில் பங்கேற்பது குறித்து இந்த ட்வீட் தவறான வழிநடத்தலை செய்யக்கூடும்” என்றும் கூறியுள்ள ட்விட்டர், அந்த பதிவினை நீக்கியது.

மற்ற செய்திகள்
