"கள்ளக்காதலிய வீட்டுக்கே அழைச்சிட்டு வருவியா?".. கோபத்துல அடிச்சே கொன்ற மனைவியால் பரபரப்பு! என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி : காதலியை தனது வீட்டிற்கே கணவர் அழைத்து வந்த நிலையில், கடும் கோபத்தில் மனைவி எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னது 72 வருசமா எங்கயுமே மாட்டலையா..! செம ‘ஷாக்’ கொடுத்த தாத்தா.. மிரண்டு போன போலீஸ்..!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள திருமலாபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி பெயர் நாச்சியார் (வயது 36). இந்த தம்பதியருக்கு, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக முருகன் பணிபுரிந்து வரும் நிலையில், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன், முருகனுக்கு பழக்கம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கண்டித்த மனைவி
ஆரம்பத்தில், இருவரும் செல்போனில் பேசி பழகி வந்த நிலையில், நாளடைவில் இந்த விவகாரம் கள்ளக்காதலாகவும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அதே பெண்ணின் வீட்டிற்கு, முருகன் அடிக்கடி சென்றும் வந்துள்ளார். கணவரின் போக்கு குறித்து, நாச்சியாருக்கு விவரம் தெரிய வரவே, முருகனை அவர் கண்டித்துள்ளார்.
கடும் வாக்குவாதம்
ஆனால், மனைவியின் கண்டிப்பை, முருகன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு முருகன் சென்றும் வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணை முருகன் தனது வீட்டிற்கும் திடீரென அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாச்சியார், முருகன் மற்றும் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மனைவி பற்றி அவதூறு
இது கைகலப்பு ஏற்படும் அளவுக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. பிறகு, அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானம் செய்து, முருகன் அழைத்து வந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அன்றிரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் முருகன். அது மட்டுமில்லாமல், நாச்சியாரைப் பற்றி அவதூறு பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, கடும் கோபத்தில் இருந்த நாச்சியார், முருகன் பேசிய வார்த்தைகளால் இன்னும் ஆத்திரமடைய, சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து, முருகன் முகத்தில் வீசியுள்ளார்.
மருத்துவமனையில் சேர்ப்பு
பின்னர், அங்கு கிடந்த கட்டை ஒன்றால், முருகனை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரத்த வெள்ளத்தில் முருகன் சரிந்து விழுந்துள்ளார். முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்ற நிலையில், முருகன் நிலையைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். மறுகணமே, முருகனை மீட்ட அவர்கள், செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணை
ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அதிகாலையில் முருகன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, நாச்சியாரை கைது செய்த செங்கோட்டை போலீசார், அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவரின் கள்ளக்காதல் உறவால் வந்த தகராறில், கணவரை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
