ஒரே ஒரு 'ஹேர்பின்' வச்சு சொந்தமா ஒரு 'வீட்டையே' வாங்கிட்டாங்க...! - சாதித்துக் காட்டிய 'டிக்டாக்' பெண்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பண்டமாற்று முறை மூலம் ஒரு புது வீட்டையே வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த கைல் மெக்டொனால்ட் என்ற 30 வயதான டிக்டாக் பிரபலம் கடந்த மே 2020-இல் 'டிரேட் மீ' திட்டத்தைத் தொடங்கினார்.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பண்டமாற்றுமுறை தான். 'டிரேட் மீ' திட்டத்தைத் தொடங்கிய டெமி முதலில் ஹேர்பின் கொடுத்து ஒரு விலை மலிவான ஒரு ஜோடி காதணியைப் பெற்றார். அதை நான்கு மார்கரிட்டா பானத்தை அருந்தும் கண்ணாடிக் கோப்பைகளாக மாற்றியுள்ளார்.
இந்த பண்டமாற்றுமுறைக்கு ஈ-பே, ஃபேஸ்புக் மார்கெட் பிளேஸ், க்ரெக்லிஸ்ட் என சரியான பொருட்களை மாற்றிக் கொள்ள பல தளங்களைப் பயன்படுத்தியுள்ளார். இவர் தான் பரிமாற்றம் செய்யும் பொருட்களை பற்றியும், வாங்கும் பொருட்களை பற்றியும் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் காணொளிகளைப் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் பிரபலமான இவருக்கு லட்சகணக்கில் பின் தொடர்வோர் இருக்கின்றனர்.
இவர் பரிமாற்றி கொள்ளாத பொருளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். வேக்கம் க்ளீனரைக் கொடுத்து பனிச்சறுக்கு போர்டாகவும், பிறகு அதை ஹெட்ஃபோனாகவும், லேப்டாப்பாகவும், கேமராவாகவும் மாற்றினார். ஆப்பிள் ஐஃபோனைப் பெறுவதற்கு முன் பல ஜோடி நைக் பயிற்சி காலணிகளையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மினி கூப்பர் (கன்வெர்டிபிள்) வாகனத்தையும் பெற்றுள்ளார். அதை விற்று ஆபரணத்தையும் அதையும் பண்டமாற்றி ஒரு பெலொடோன் சைக்கிள் பயிற்சி வாகனத்துக்கு பரிமாற்றம் செய்து கொண்டார். அதன் மதிப்பு 1,800 அமெரிக்க டாலர்.
கடந்த டிசம்பர் மாதம், பெலொடோன் சைக்கிளைக் கொடுத்து மஸ்டங் வாகனம் ஒன்றைப் பெற்றார் டெமி. பிறகு அதைக் கொடுத்து ஒரு சிறிய மரத்தினாலான கேபின் வீட்டைப் பெற்றார். ஒரு சில நேரங்களில் இவர் விலை குறைந்த பொருட்களை வாங்கி ஏமாறுவதும் உண்டு. ஆனால் எதற்கும் மனக்கவலை கொள்ளாமல் பண்டமாற்று முறையை செய்து கொண்டே வந்துள்ளார்.
அவர் வைத்திருந்த ஹோண்டா சி.ஆர்.வி வாகனத்தைப் பெற்றார், அது மூன்று டிராக்டர்களாகவும், பின் சிபொட்லே பிரமுகர் அட்டையாகவும் மாறியது. அந்த அட்டையை கொண்டு இழுவை வாகனம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் வால் எனப்படும் பிரமாண்ட பேட்டரியைப் பெற்றார்.
கடைசியாக அதை வைத்து டென்னஸி மாகாணத்தில் நாஷ்வில்லேவில் உள்ள வீட்டைப் பெற்றார். இந்த வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலராக இருக்கலாம் என 7நியூஸ், நியூஸ்.காம், சிட்னி நியூஸ் டுடே போன்ற பல்வேறு செய்தி வலைதளங்கள் குறிப்பிட்டுள்ளன.
அவர் வாங்கிய வீட்டை பார்க்க செல்லும் போது அவர் அனுபவத்தை வீடியோவாகவும் பதிவிட்டு சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவர் மேற்கொண்ட பயணத்தைப் பின்தொடர்ந்தனர்.
தங்கள் புதிய வீட்டை புனரமைக்க, டெமி ஸ்கிப்பரும் அவரது கணவரும் கலிஃபோர்னியாவில் இருந்து, டென்னஸிக்கு நகர கடந்த ஜனவரியில் திட்டமிட்டனர்.

மற்ற செய்திகள்
