அதிசயம்... ஆனால் உண்மை..! வானில் இருந்து கொட்டிய மீன் மழை..! வியப்பில் மக்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Rahini Aathma Vendi M | Jan 03, 2022 09:16 PM

வானத்தில் இருந்து மீன் கொட்டியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மையிலேயே அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வானத்தில் இருந்து மீன்கள் மழையாகக் கொட்டியுள்ளன.

it rained fishes in texas, US on december 30th

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் வானில் இருந்து மழை உடன் மீன்களும் மழையாகப் பொழிந்துள்ளன. இதை நம்ப முடியவில்லை என்றாலும் இந்த அதிசயத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்து தற்போது சமுக வலைதளங்களிலும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த மீன்கள் மழை கடந்த டிசம்பர் 30-ம் தேதி நிகழ்ந்துள்ளது.

it rained fishes in texas, US on december 30th

வானில் இருந்து மீன்கள் கொட்டுவது சாத்தியமா? என்ற கேள்வி எழலாம். ஆனால், அறிவியல்பூர்வமாகவே இதற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. காற்றழுத்தத்தால் நீர் பகுதிகளில் இருந்து மீன், தவளை போன்ற சிறிய உயிரினங்கள் நீராவி உடன் மேகங்களுக்குள் இழுக்கப்பட்டு அப்பகுதியில் இதுபோல் மீன் மழையாகப் பொழிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

it rained fishes in texas, US on december 30th

உலகத்தில் இது போல் மீன் மழை பொழிவது இது முதல் முறை இல்லை. டெக்சாஸ் மாகாணத்துக்கு முன்னாள் அமெரிக்காவிந் கலிஃபோர்னிய மாகாணத்தில் இதுபோன்ற மீன் மழை இதற்கு முன்னர் பேய்ந்துள்ளது. இதுபோக, மெக்சிகோ, செர்பியா ஆகிய நாடுகளிலும் இதுபோல் மீன்கள் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்நிகழ்வு உலக அதிசயமாகப் பார்க்கப்படவில்லை.

it rained fishes in texas, US on december 30th

ஆனால், இந்நிகழ்வை நேரில் பார்க்கும் மக்களுக்கு இது நிச்சயம் உலக அதிசயம் ஆகத் தான் இருக்கும். பலரும் சமுக வலைதளங்களில் இதுகுறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இயற்கை தண்டிக்கிறது என்றும் இன்னும் சிலர் இயற்கையில் இன்னும் பல அதிசயங்கள் நிகழ்கின்றன என்றும் மாறுபட்ட கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : #RAIN #மீன் மழை #டெக்சாஸ் #அமெரிக்கா #FISH RAIN #FISH RAIN IN TEXAS #TEXAS RAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. It rained fishes in texas, US on december 30th | World News.