ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்.. ரூ. 3200 கோடி பரிசு.. ஆனா, அத வாங்குறதுக்கு தான் ஆள் இல்லை.. இப்டி ஒரு ட்விஸ்டா??
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா : ஒரே ஒரு லாட்டரி மூலம் 3200 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்த நிலையில், அந்த லாட்டரி வாங்கிய நபரை பலரும் தேடி வருகின்றனர்.

திரைப்படங்களில் எல்லாம் வருவது போல, ஒரே பாடலிலோ, அல்லது கண் மூடி திறப்பதற்கு முன்னரோ, பணக்காரனாகவோ அல்லது கோடீஸ்வரனாகவோ நிஜத்தில் ஒருவரால் மாற முடியுமா என பலரும் ஆச்சரியத்துடன் கேட்கலாம்.
சிலர் கண்டிப்பாக அது சினிமாவிலும், கனவிலும் மட்டும் தான் நடக்கும் என்று கூட நகையாடுவார்கள். ஆனால், அப்படி ஒரு சம்பவம், எப்போதாவது நிகழும் என்றால், லாட்டரி வாங்குவது மூலமாக தான்.
கோடீஸ்வரன்
சமீபத்தில் கூட, கேரளாவில் ஒருவர் வீட்டுக்காக பொருட்கள் வாங்க சென்ற போது, லாட்டரியும் கூட வாங்கிச் சென்ற நிலையில், அன்று மதியமே அவருக்கு சு மார் 12 கோடி ருபாய் பரிசு விழுந்து, அவரை கோடீஸ்வரன் ஆக்கியது. இந்நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது. ஆனால், பரிசு தொகை என்ன என்று தெரிந்தால் ஒரு நிமிடம் உங்களுக்கு தலையே சுற்றி விடும்.
பரிசு மட்டும் இவ்வளவு கோடியா?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உட்லேண்ட் ஹில்ஸ் பிரிவில் இருக்கும் கேஸ் நிலையம் ஒன்றில், அந்த லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு லாட்டரி வாங்கிய அந்த நபருக்கு, சுமார் 3,200 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது.
யார் அந்த நபர்?
இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த லாட்டரி விழுந்த நபர் யார் என்பது பற்றிய விவரம் சரி வர தெரியாவில்ல்லை. அவரை லாட்டரி நிறுவனம் தற்போது தேடிக் கொண்டிருக்கிறது. லாட்டரி பரிசு அடித்த அந்த நபர், தனக்கு விழுந்த தொகையை ஒரே தவணையாகவும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது 29 ஆண்டுகள், தவணை முறையிலும் பெற்றுக் கொள்ளலாம் என கலிஃபோர்னியா மாநில லாட்டரி நிர்வாகம் கூறியுள்ளது.
அதிர்ஷ்டசாலி
இது பற்றி, கலிஃபோர்னியா லாட்டரி இயக்குனர் ஜான்சன் பேசும் போது, 'ஏதாவதொரு சமயங்களில், இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்காவது கிடைக்கும். ஆனால், இப்போது அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை. அவர் விருப்பப்படி தனக்கு கிடைத்த பரிசு தொகையை, ஒரே தவணையிலோ அல்லது தவணை முறையில், 29 ஆண்டுகளாகவும் வாங்கிக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.
3200 கோடி ரூபாய் என்னும் மிகப் பெரிய பரிசுத் தொகை, ஒரே லாட்டரி டிக்கெட் மூலம் அடித்துள்ளதால், அந்த மச்சக்கார நபர் யார் என பலரும் ஆவலுடன் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
