'மாஸ்க்' போட சொன்னதுக்காக போயும்போயும் 'அதையா' எடுத்து முகத்துல போடுவீங்க...? - கடுப்புல பயணி 'செய்த' காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானத்தில் பயணி ஒருவர் மாஸ்க் அணியாமல் வந்த விவகாரம் சர்ச்சையில் போய் முடிந்துள்ளது.

அமெரிக்காவில் இன்றளவும் கொரோனா பரவல் அடங்காத சூழலில் அங்கு பல கட்டுப்பாடுகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் அணித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போல பல கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விமானத்தின் உள்ளே பயணிக்கும், விமான ஊழியர்களுக்கும் மாஸ்க் காரணமாக நடந்த விவாதம் ஒரு விமானத்தையே காலி செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.
அதாவது நேற்று முன்தினம் ஆடம் ஜேன் என்ற பயணி அமெரிக்காவின் ஃபோர் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஏறியுள்ளார். விமானத்தில் ஏறியபின் ஆடம் தன் மாஸ்க்கை கழட்டியுள்ளார்.
அப்போது விமானத்தில் கொரோனா பரவலுக்காக ஆடமை மாஸ்க் அணியுமாறு பணிப்பெண் கேட்டுள்ளார். ஆனால் ஆடம் மாஸ்க் அணிய மறுத்துள்ளார். அதற்கு விமான பணிப்பெண் 'நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்படுவீர்கள். உங்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்று கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான ஆடம் உள்ளாடையை வைத்து முகத்தை மறைத்துள்ளார். அதோடு 'அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளாடையை மாஸ்க்காக அணியலாம் என்று கூறப்பட்டிருந்தது. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. விமானத்திற்குள்ளே வரும் வரை மாஸ்க் அணிகிறார்கள்.
இங்கு விமானத்திற்குள் சாப்பிடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் மாஸ்க்கை கழட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அப்போதெல்லாம் யாரும் மாஸ்க் அணியவில்லை. இந்த முரண்பாட்டிற்கு காரணத்தை கூறுங்கள்' என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அதன்பின் மாஸ்க் அணியாத விமான பயணி கீழே இறக்கி விடப்பட்டார். இதனால் கடுப்பான விமானத்தில் இருந்த சகபயணிகள் ஆடமுக்கு ஆதரவு தெரிவித்துகீழே, இறங்கியதால் இந்த விவகாரம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதோடு விமானத்தில் தனக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்த ஆடம் ஜேன், அவர்கள் அநீதி நடப்பதை உணர்ந்து எனக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கூறினார்.

மற்ற செய்திகள்
