'பயணிகளுக்கு சர்ப்ரைஸ்' ...ஒரே நாளில் ட்ரெண்டான 'விமான பணிப்பெண்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 10, 2019 01:24 PM

விமான பயணத்தில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.எனவே விமானம் கிளம்பும் முன்பு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை விமான பணியாளர்கள் வழங்குவது வழக்கம்.அந்த வகையில்,பாதுகாப்பு அறிவுறுத்தல்களை 'ராப் பாடல்' வடிவத்தில் வழங்கிய விமான பணிப் பெண்ணின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Air hostess raps safety instructions on flight video goes viral

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அடில் எனும் அந்த ஊழியர் வழக்கமான முறையிலேயே அறிவிப்புகளை வழங்கி வந்தார்.ஆனால் இது வழக்கமான நடைமுறை தானே என பயணிகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்க வந்த அவர் திடீரென ராப் வடிவத்தில் அதனை பாட ஆரம்பித்தார்.இதனை கண்ட பயணிகள் உற்சாகமடைந்தார்கள்.உடனே பயணிகளும் அவருடன் இணைந்து தமது கைகளால் தாளம்போட்டனர்.

பாடல் முடிந்த பின்னர் பலத்த கை தட்டல் கொடுத்த பயணிகள், அந்தப் பணிப்பெண்ணை உற்சாகமாக பாராட்டினர்.இந்த வீடியோவை பார்த்த பலரும் விமான பணிப்பெண்ணை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Tags : #TWITTER #AIR HOSTESS #VIRAL VIDEO #SAFETY INSTRUCTIONS #SOUTHWEST AIRLINE #RAPPED