கூண்டில் பிடிப்பட்டதால் வனத்துறை வாகனத்தைத் தாக்க முயன்ற கரடி! வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Mar 23, 2019 10:31 PM
கூண்டில் பிடிபட்ட கரடியை வன பகுதியில் விடும் போது வனத்துறையினர் வாகனத்தைத் தாக்க வந்த கரடியால் பரபரப்பு.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் கரடி ஒன்று கடந்த 15-ந்து நாட்களாக பொது மக்களை அச்சுறுத்தி வந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வந்தது.
இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கபட்டது. இதற்க்கிடையில் அப்பகுதியில் வைக்கப்பட்ட அந்த கூண்டில் நேற்று அந்த கரடி சிக்கியது. பின்னர்,கூண்டில் சிக்கிய அந்த கரடியை 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோர குந்தா வன பகுதியில் விட முடிவு செய்து இன்று எடுத்துச் சென்றனர்.
வைரல் வீடியோ : https://youtu.be/Js4WpMaDtMM
அப்போது கூண்டிலிருந்து வெளியே வந்த அந்த கரடி வனத்துறையினர் இருந்த வாகனத்தை தாக்க சத்தமிட்டப்படி வந்ததை பார்த்து வனத்துறையினர் அச்சமடைந்த நிலையில் நின்றனர், வனத்துறையினர் வாகனத்தை பார்த்து நின்று கொண்டிருந்த கரடி, பின்னர் சிரிது நேரம் கழித்து வன பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு சிரிது நேரம் பரபரப்பு நிலவியது.
