'நீங்க இப்படி ட்வீட் போடுறீங்க'...'உங்க கணவர் என்ன போட்டார் தெரியுமா'?...சாடிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 02, 2019 01:40 PM

இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை வரவேற்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிவிட்ட ட்வீட்டிற்கு அவரது கணவர் சோயப் மாலிக் போட்ட ட்வீட்டால்,இணையத்தில் கடும் சர்ச்சை வெடித்தது.நெட்டிசன்கள் பலரும் சனியாவை விமர்சித்து வருகிறார்கள்.

Sania mirza and Shoaib malik tweet about abinandhan goes viral

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இருப்பினும் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பிலேயே சானியா விளையாடி வருகிறார்.சானியா இந்தியாவையும் சோயப் மாலிக் பாகிஸ்தானையும் சேர்ந்தவராக இருப்பதால் இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதெல்லம் பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லம் அவர்கள் இருவர் பதிவிடும் ட்வீட்யும் பரபரப்பை கிளப்பும் .

இதனிடையே சமீபத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலின் போது சானியா மிர்சா, எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.இதனால் கடுப்பான அவர் 'பிரபலம் என்றாலே தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் கண்டிக்கவேண்டிய அவசியம் இல்லை என கடுமையாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று இந்திய வந்தடைந்த விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்று சானியா ட்வீட் செய்திருந்தார். அதில், “விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். எங்களின் உண்மையான ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் காட்டிய துணிவு மற்றும் கண்ணியத்திற்கு இந்த நாடே உங்களை வணங்குகிறது” என்று கூறியிருந்தார்.

அவர் பதிவிட்ட அந்த ட்வீட் ட்விட்டரில் வைரலானது.இந்நிலையில் இந்திய விமானப்படை அதிகாரியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தபோது, உங்களது கணவர் சோயப் மாலிக் என்ன பதிவிட்டார் தெரியுமா? என அவரின் ட்வீட்டை பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Tags : #PULWAMAATTACK #CRPFJAWANS #INDIANAIRFORCE #TWITTER #SANIA MIRZA #SHOAIB MALIK #ABINANDHAN