'போலீஸை வச்சு ஏன் மிரட்டுறீங்க'?...பரபரப்பை கிளப்பியிருக்கும்...'கவர்னர் பேத்தியின்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 05, 2019 11:20 AM
சமீபகாலமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் சுழன்று வருகின்றன.இந்நிலையில் கிரண் பேடியின் பேத்தி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ''நான் தான் கிரண் பேடியின் ஒரே பேத்தி.கிரண் நானி, அப்பா - அம்மாவுக்கு இடையில் எவ்வளவோ பிரச்னைகள் வந்திருக்கின்றன.ஆனால் அப்போதெல்லாம் உங்கள் பிரச்சனைக்கு நான் வர மாட்டேன் என கூறிக்கொண்டு,இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள். அப்பாவையும் அவருடைய நண்பர்களையும் போலீஸை வைத்து ஏன் துன்பப்படுத்துகிறீர்கள்,என பல கேள்விகளை அந்த வீடியோவில் அவர் எழுப்பியுள்ளார்.
இறுதியாக நான் அப்பாவோடு சந்தோசமாகவும்,பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என அந்த வீடியோ பதிவை முடித்துள்ளார்.இந்நிலையில் பேத்தியின் வீடியோ பதிவு குறித்து விளக்கமளித்துள்ள கிரண் பேடி ''அவள் விளையாட்டாக பேசுகிறாள்.என் பேத்தி கூறியவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு இதற்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை'' என தெரிவித்துள்ளார்.மேலும் இது எப்போதோ முடிந்து போன விவகாரம். நீதிமன்றம் அளித்த நோட்டீஸை வழக்கறிஞர் மூலம் யூடியூபில் தெரிவித்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
