'அன்பென்றாலே அம்மா'...'76 வயது மகளை கண்டவுடன்'...கண்கலங்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 04, 2019 11:03 AM

உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் 76 வயது மகளை காண வந்த தாயின்,வீடியோ காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது.

97 year old mom visits her 76 year daughter who is sick

அம்மாவின் அன்பிற்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை என்று  கூறலாம். அம்மாவின் அன்பு என்பது அவர் இருக்கும் போது யாருக்கும் புரிவதில்லை.அவர் இல்லை என்ற நிலை வரும்போது தான் ''ஐயோ அம்மாவ ரொம்ப மிஸ் பண்றேன்'' என பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம்.

என் மகன்,என் மகள் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரே உறவு அம்மா மட்டுமே.அம்மாவின் அன்பு கிடைக்காமல் பலர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.அதே நேரத்தில் அம்மா என்ற ஜீவன் நம்முடன் இருக்கும்போது அவரை மதிக்காமல், அம்மாவின் அன்பை உதாசினப்படுத்தும் பலரும் இங்கு இருக்கத் தான்  செய்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படும் வீடியோ ஒன்று காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.'உடல் நல குறைவால் அவதிப்படும் தனது 76 வயது மகளை காண வந்த 97 வயது தாய்,தனது மகளை கண்டவுடன் கட்டி அணைத்து முத்தமிட்டு,ஆனந்த கண்ணீர் விடும்' அந்த வீடியோ காண்போர் யாராக இருந்தாலும் அவர்களின் கண்ணில் நிச்சயம் கண்ணீரை வரவழைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இது போன்று அவ்வப்போது பகிரப்படும் வீடியோகள் தாயின் அன்பு எவ்வளவு புனிதமானது,அது தன்னலமற்றது என்பதனை நிரூபித்து கொண்டு இருக்கின்றன.

Tags : #TWITTER #97 YEAR OLD MOM #76 YEAR DAUGHTER #EMOTIONAL