'கேம் ஆட இடமா இல்ல'...'டாய்லட்டில் இருந்து கேம்' ஆடிய சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 07, 2019 03:45 PM

செல்போன் மோகம் ஒருவரை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

Six-year-old Chinese boy rescued after being stuck in toilet seat

மத்திய சீனாவின் வுஹான் நகரத்தில் வசிக்கும் 8 வயது ஒருவன் டாய்லட்டிற்கு சென்றிருக்கிறான்.அப்போது கூடவே கேம் விளையாடுவதற்காக மொபைல் போனையும் எடுத்து சென்றிருக்கிறான்.உள்ளே சென்ற அவன் பல மணி நேரமாக டாய்லட்டில் உட்கார்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளான்.இதனிடையே நீண்ட நேரமாக டாய்லட்டில் உக்கார்ந்து இருந்ததால்,உடலின் பிற்பகுதி உள்ளே சிக்கிக்கொண்டது.அவன் எவ்வளவோ முயன்றும் வெளியே வர முடியாததால் கதறி அழுதான்.

இந்நிலையில் மகனின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த தாய்,சிறுவனின் நிலையினை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே சிறுவனை வெளிய தூக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.ஆனால் சிறுவனின் தாய் எவ்வளவோ முயன்றும் ஆவரால் சிறுவனை வெளியே எடுக்க முடியவில்லை.உடனே சம்பவம் குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த மீட்பு குழுவினர் சிறுவனை பத்திரமாக வெளியே எடுத்தார்கள்.செல்போன் மோகத்தினால் சிறுவர்கள் ஆபத்தில் சிக்குவது தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.எனவே செல்போன் விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமே.

Tags : #TWITTER #MOBILE GAME #VIRAL VIDEO