'செல்ஃபி எடுக்க முயற்சித்த தொண்டர்'...'அன்புமணியின் ரியாக்‌ஷன்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 09, 2019 09:41 AM

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கட்டங்களாக சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

Anbumani reaction while party member taking selfie with him

இதனிடையே சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பேசிய மேடையில் தொண்டர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சிக்க அதனை தடுத்த அன்புமணி ராமதாஸின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கூட்டத்தில் தொண்டர்களை நோக்கி கை அசைத்து கொண்டு வரும் வேளையில் திடீரென தொண்டர் ஒருவர் தனது மொபைலை எடுத்து அன்புமணியோடு செல்ஃபி எடுக்க முயற்சித்தார்.

உடனே சுதாரித்து கொண்ட அன்புமணி அதனை தடுத்து தொண்டரின் கையினை இறக்கி விடுகிறார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.