'ஒரே ஒரு போட்டோ...டோட்டல் இமேஜ் டேமேஜ்'...இந்திய வீரரை...வெச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 20, 2019 12:17 PM

ஐபிஎல் போட்டிகள் இன்னும் தொடங்கவில்லை.ஆனால் அதுகுறித்த மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் பறக்க ஆரம்பித்து விட்டன.வீரர்கள் செய்யும் செயல் பரபரப்பு ஆகுதோ இல்லையோ,நெட்டிசன்கள் கண்ணில் பட்டால் போதும் அதை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள்.அவ்வாறு தற்போது நெட்டிசன்கள் கண்ணில் சிக்கியவர் இந்திய வீரரும்,ராஜஸ்தான் கேப்டனுமான ரஹானே.

Rahane\'s tweet was quickly swamped by fans

ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சியில் இருந்த அவர்,பயிற்சியில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் சொல்லுங்கள்" என ஒரே ஒரு ட்விட் தான் போட்டார்.உடனே நெட்டிசன்கள் அந்த போட்டோவை வைத்து மீம்ஸ்களால் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

கடைசியாக கடந்த  2018ம் ஆண்டு பிப்ரவரியில் சிட்னி டெஸ்ட்டில் பங்கேற்ற ரஹானே,அதன்பின்பு அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.இந்நிலையில் வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் சொதப்பிய அவர்,வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.

Tags : #IPL2019 #IPL #TWITTER #RAJASTHAN-ROYALS #AJINKYA RAHANE