'ஓட்டு போடுங்க'.. 'மறக்காம செல்ஃபி எடுங்க'.. '7000 ரூபாய் பரிசு வெல்லுங்க'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 10, 2019 12:47 PM

ஓட்டுப் போட்ட மை விரலுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அனுப்பினால், பரிசுத் தொகை வழங்கப்படும் என மிசோரம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

mizoram election commission announces cash prize for best voter selfie

மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு  சதவிகிதத்தை உயர்த்த மிசோரம் தேர்தல் ஆணையம் புதுவிதமான யுக்தியை செயல்படுத்தியுள்ளது.

இளம் வாக்காளர்களை கவரும் விதத்தில் செல்ஃபி பரிசுப் போட்டி ஒன்றை அம்மாநில தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிசோரம் மாநிலத்தில் நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்துபவர் குழுவாகவோ, தனியாகவோ இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சில விதிகளையும் அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் வாக்கு செலுத்துவதற்கு முன் அதாவது வாக்கு செலுத்தும்போது வரிசையில் நிற்பது போன்ற ஒரு செல்ஃபி புகைப்படம், வாக்கு செலுத்தியப் பிறகு மை வைத்த விரலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒரு செல்ஃபி புகைப்படம். நல்ல வாசகம் அடங்கிய தலைப்பின் கீழ் அந்தப் புகைப்படங்களை #MizoramVotes - என்ற ஹாஷ்டேக் உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுப்ப வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் 9089329312 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் அந்தப் புகைப்படத்தை நாளை மாலை 7 மணி வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக 7000 ரூபாயும், 2-வது மற்றும் 3-வது பரிசாக 3000 ரூபாயும், அத்துடன் வெற்றிப்பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #MIZORAMVOTES #SELFIE #CASHPRIZE