'எப்பா சாமி இது யாருக்கும் நடக்க கூடாது'... 'புத்தம் புதிய கியா காரை டெலிவரி எடுத்த ஓனர்'... 'அடுத்த கணம் நடந்த அதிர்ச்சி'... வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புத்தம் புதிய காரை டெலிவரி எடுத்த மறுகணமே அது விபத்தில் சிக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரிய கார் நிறுவனமான கியா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதன் வடிவமைப்பும், அந்த விலையில் கியா வழங்கும் வசதிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தியாவில் கியா செல்டோஸ், கியா கார்னிவெல் என்ற இரண்டு கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகம் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் கியா விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், கியா தனது உற்பத்தி தொழிற்சாலையை ஆந்திராவில் அமைத்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள கியா விற்பனை மையத்திலிருந்து கியா கார்னிவெல் காரை டெலிவரி எடுத்த உரிமையாளர் ஒருவர்,கார் வெளியே வந்த சில நொடிகளில் விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
விற்பனை மையத்திலிருந்து அவர் காரை வெளியே எடுக்கிறார். அப்போது வேகமாக வந்த காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த அவர் தவறிய நிலையில், அந்த கார் எதிரில் இருந்த சுவரின் மீது மோதுகிறது. மோதிய வேகத்தில் காற்று பைகள் (Air Bag) வெளிப்பட்டது. இதில் காரை ஓட்டிய நபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் டெலிவரி எடுத்த சிறிது நேரத்தில, புத்தம் புதிய கார் விபத்துக்கு உள்ளானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலைமை யாருக்கும் வர கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.