தோட்டத்தில் கிடச்ச ‘மர்மப்பொருள்’.. ‘பார்க்க ரேடியோ மாதிரி இருக்கு’.. சோதனை செய்த விவசாயி.. நொடியில் நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது பூந்தோட்டம் அருகே உள்ள நடைபாதையில் எஃப்.எம் ரேடியோ போன்ற மின்சாதனம் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இதனை அவர் நேற்று தனது வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். இதனை அடுத்து அதை சோதனை செய்து பார்த்துள்ளார். ஆனால் அது இயங்காததால் அதற்கு மின் இணைப்பு கொடுத்து சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த மர்ம பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. சத்தம் கேட்டு அக்கம்க்கத்தினர் வந்து பார்த்தபோது மணி, அவரது பேத்தி உட்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனே அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் மணி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம பொருள் வெடித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
