உலகமே ‘கொரோனாவ’ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு.. இந்த சமயத்தை பயன்படுத்தி ‘இது’ நடக்க வாய்ப்பு இருக்கு.. ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 10, 2020 04:14 PM

கொரோனா காலத்தை பயன்படுத்தி தீவிரவாத தாக்குதல் நிகழ வாய்ப்பு உள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

UN chief warns COVID19 threatens global peace and security

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்றை தடுப்பதில் உலக நாடுகள் கவனம் திரும்பியிருக்கும் இந்த சமயத்தை சாதமாக பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதிலும், அமைதியை நிலை நாட்டுவதிலும் உலக நாடுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா சபை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்போதுதான் கடுமையான சோதனைகளை உலகம் சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.