'கொரோனா 50 கோடி மக்களை ஏழையாக்கும்...' '40%பேர்' 'கிழக்காசியவை' சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.. 'ஐ.நா.வின் அதிரவைக்கும் அறிக்கை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 10, 2020 03:56 PM

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுமார் 50 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

50 crore people will go to poverty due to coronation

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள  மனித இழப்பு மற்றும் பொருளாதார சரிவு குறித்து லண்டனின் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைகழக பொருளாதார நிபுணர்கள் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கையை ஐக்கியநாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

அதில், உலக அளவில் சுமார்  50 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்லும் நிலை ஏற்படும் என்றும், இதனால் 2030- ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதும், ஏழை மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது

கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் நேரத்தில் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் ஏழைகளாக மாறியிருப்பார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவிகிதம் பேர் கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கென்யா நாட்டின் நைரோபியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஆக்ஸ்பார்ம் தொண்டு நிறுவனம் கொரோனாவின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை, "பெருகிவரும் பொருளாதார நெருக்கடி 2008ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார நெருக்கடியைவிட ஆழமானது." எனக் கூறுகிறது. "1990ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகில் வறுமை நிலை அதிகரிக்கக்கூடும்." என்றும் "சில நாடுகள் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த இடத்துக்கு பின்னடைய நேரிடும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கியின் வெவ்வேறு வறுமை நிலை வகைப்பாடுகள் அடிப்படையிலும் சில கணிப்புகளை இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது. மிகவும் தீவிரமான கட்டத்தில் 20 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டால், 43.4 கோடி முதல் 92.2 கோடி பேர் அதீத வறுமை நிலையை அடையக்கூடும்.

இந்தச் சூழலில் நாளுக்கு 5.50 டாலருக்குக் (இந்திய மதிப்பில் சுமார் 400 ரூபாய்) குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள் எண்ணிக்கை 400 கோடியாக உயரக்கூடும் என்று ஆக்ஸ்பார்ம் அறிக்கை சொல்கிறது.