'இப்போ தான் எல்லாம் சரி ஆகுது'...'உடனே தன்னோட வேலைய காட்டிய சீனா'...மூக்கை உடைத்த இந்தியா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 10, 2020 06:36 PM

கொரோனா பாதிப்பினால் சீனா நிலைகுலைந்து போயிருந்த நிலையில், தற்போது தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கு எதிராக சீனா பேசிய கருத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

India slams China over comments on Jammu and Kashmir

கொரோனா உலகையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், சீனா அதன் வரலாற்றிலேயே எதிர்பாராத அளவுக்கு பெரும் உயிரிழப்பை சந்தித்தது. தற்போது அங்கு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், ஜம்மூ காஷ்மீர் விவாகரத்தை சீன அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்குச் சீனாவின் நிரந்தர மிஷன் பிரிவின் செய்தித் தொடர்பாளர், ஐ.நா சபைக்கு அறிக்கை மூலம் ஜம்மூ காஷ்மீர் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

“ஐக்கிய நாடுகள் சபைக்குச் சீனாவின் நிரந்தர மிஷன் பிரிவின் செய்தித் தொடர்பாளர், ஐ.நா சபைக்கு அறிக்கை மூலம் ஜம்மூ காஷ்மீர் குறித்து குறிப்பிட்டுள்ளதை நாங்கள் மறுக்கிறோம். ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து சீனாவுக்கு நன்றாகத் தெரியும். ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது அப்படியே இருக்கும். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், எனவே சீனா அதுகுறித்து பேசாமல் இருக்க வேண்டும் என இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.