'80 வயதிலும் போராடிய கேரள டாக்டர்'...'இந்தியர்கள் கிட்ட இது ரொம்ப அதிகம்'... நெகிழ்ந்த இங்கிலாந்து!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 10, 2020 01:43 PM

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலியாகியுள்ள நிலையில், இந்திய மருத்துவர்களை பார்த்து இங்கிலாந்து நெகிழ்ந்து போயியுள்ளது.

CoronaVirus : Two Indian doctors have died of Covid-19 in the UK

இங்கிலாந்து நாட்டில், தேசிய சுகாதார பணியில் சுமார் 65 ஆயிரம் இந்திய டாக்டர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் இந்தியாவில் தங்களின் பயிற்சியை நிறைவு செய்தவர்கள். இதற்கிடையே இங்கிலாந்தில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு இந்திய டாக்டர்கள் தைரியமாக களத்தில் நின்று பணியாற்றி வருகிறார்கள்.

இந்தசூழ்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இந்திய டாக்டர் ஜிதேந்திர ரோதட் என்பவர் கொரோனா தாக்குதலால் உயிர் இழந்தார். 58 வயது இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரான அவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது இன்னொரு இந்திய மருத்துவரும் பலியாகி உள்ளார். கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்ற கம்சா பச்சேரி என்ற80 வயது மருத்துவரான அவர், கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளார்.

இதற்கிடையே இந்திய மருத்துவர்களின்  மனிதநேய அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மையை பார்த்து வியந்துள இங்கிலாந்து தேசிய சுகாதார ஆணையம், இந்தியர்களுக்கு தைரியம் ரொம்ப அதிகம் என நெகிழ்ந்துள்ளது.