திருப்பதி ஏழுமலையான் கோவில்... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!... தரிசனத்திற்கான முன்பதிவில் தேவஸ்தானம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு செய்யப்படும் முன்பதிவு குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஜூன் மாதத்திற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மே மாதத்திற்கு முன்பதிவு செய்திருந்த தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 2 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும். இதனால் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள்.
இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு கோட்டா நாளை வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தற்காலிகமாக டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், மே 30-ந்தேதி வரை தரிசனம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தும், அதற்கான பணத்தை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 20-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு, சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெறுகிறது. இதில் அர்ச்சகர்கள் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
