லாட்டரியில் ₹ 248 கோடி ஜெயிச்ச நபர்.. குடும்பத்துக்கு தெரிய கூடாதுன்னு எடுத்த முடிவு.. வைரல் சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த ஒருவர் தனக்கு கிடைத்த லாட்டரி வெற்றி குறித்து தனக்கு குடும்பத்தினர் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காக கார்ட்டூன் வேடமணிந்து சென்று காசோலையை பெற்றிருக்கிறார். அதற்கு அவர் சொல்லிய காரணம் பலரையும் அடடே சொல்ல வைத்துள்ளது.

சீனாவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? அப்படியானவர்களில் ஒருவர் தான் சீனாவை சேர்ந்த லீ.
இந்த பெயரும் அவருடைய புனைப்பெயர் தானாம். இவர் சமீபத்தில் சீனாவின் குவாங்சி ஜுவாங் என்னும் இடத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதுவும் 90 யுவான்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 1000 ரூபாய்). இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரிக்கு 220 மில்லியன் யுவான்கள் பரிசாக கிடைத்திருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 248 கோடி ரூபாய். இதனையடுத்து அவர் தனது வெற்றிக்கான காசோலையை வாங்க கார்ட்டூன் வேடத்தில் வந்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"நான் லாட்டரியில் வெற்றி பெற்றது எனது மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ தெரியக்கூடாது என முடிவெடுத்தேன். ஏனென்றால் இவ்வளவு பணம் கிடைத்துவிட்டால் பிறரை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடும். அதன்பிறகு அவர்கள் உழைக்கவோ, படிப்பில் கவனம் செலுத்தவோ மாட்டார்கள். ஆகவே கார்ட்டூன் வேடத்தில் காசோலையை பெற வந்தேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்துவிட்டது என்பதை அறிந்தவுடன், ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருந்திருக்கிறார் அவர். இதுபற்றி வெற்றியாளர் பேசுகையில்,"எனது டிக்கெட்டை தொலைத்துவிட கூடாது என்பதற்காக ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருந்தேன். முன்னரே சிறிய சிறிய தொகைகளை லாட்டரியில் வென்றிருக்கிறேன் என்றாலும், இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது" என்றார்.
இந்நிலையில், தனக்கு கிடைத்த பணத்தில் இருந்து 5 மில்லியன் யுவான்களை சமூக உதவி குழுக்களுக்கு நன்கொடையாகவும் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார் இந்த மர்ம நபர்.
Also Read | 32 வயசு வித்தியாசம்.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவருகூட தான்.. ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த கல்லூரி மாணவி..!

மற்ற செய்திகள்
