வெளில பார்க்க தான் ரயில்.. ஆனா உள்ள.. ரயில்வே நிர்வாகத்தின் தரமான சம்பவம்.. இனி எதுவும் வேஸ்ட் ஆகாது.. வைரல் PICS..!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்தியன் ரயில்வே. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரயில் பயணங்கள் பலருக்கும் பிடிக்கும். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு வெளியே நடப்பவற்றை ரசித்தபடியே பயணிப்பது அலாதியான அனுபவம் தான். அப்படியானவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது இந்தியன் ரயில்வேயின் இந்த முடிவு. மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் பெட்டியை உணவகமாக மாற்றி அசத்தியுள்ளது ரயில்வே நிர்வாகம். மறுசுழற்சி முறையில் எதையும் வீணாக்காமல் ரயில் பெட்டியை அப்படியே உணவகமாக மாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வித்தியாசமான உணவகத்தின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலக நாடுகள் தற்போதைய சூழ்நிலையில் சந்தித்துவரும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று இந்த மறுசுழற்சி. மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவாக தேவைகளும் மிதமிஞ்சி போகவே, பொருட்களின் உருவாக்கமும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்டு வீசியெறிப்படுவதால் தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். இந்நிலையில், இந்த சிக்கலை தீர்க்க இந்தியன் ரயில்வே புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பழைய ரயில் பெட்டியை புது உணவகமாக மாற்றி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்
மேற்கு வங்கத்தின் புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. இதுகுறித்து இந்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில்,"பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், மேற்கு வங்கத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட ரயில் கோச் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பழைய பயணிகள் பெட்டியை மறுசுழற்சி செய்து இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன், இந்த ரயில்பெட்டி உணவகத்தின் புகைப்படத்தையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதுடன், மக்களிடையே இந்த திட்டம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
Coach to Restaurant!
With an aim to provide a unique experience to the visitors, an aesthetically designed Rail Coach Restaurant has been opened at New Jalpaiguri Railway Station, West Bengal. The restaurant has been set up by recycling an old passenger coach. pic.twitter.com/2rKV8SPYrU
— Ministry of Railways (@RailMinIndia) October 28, 2022
Also Read | "4 மணி நேரமா ரிப்ளை வரல".. சந்தேகமடைந்த தோழி செஞ்ச வினோத காரியம்.. இதுவல்லவோ FRIENDSHIP..