Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

43 வருசமா அப்பா கல்லறைக்கு போய் வரும் மகள்.. "இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே".. குடும்பத்தையே சுக்கு நூறாக்கிய உண்மை

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 23, 2022 02:14 PM

கடந்த 43 வருடங்களாக, தனது தந்தையின் கல்லறைக்கு பெண் ஒருவர் சென்று வரும் நிலையில்,  இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தெரிய வந்துள்ள தகவல், அவர்களின் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

family discover they have been visiting wrong grave of his dad for 43

Also Read | ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பூக்களுக்கு நடுவே இருந்த விஷயம்.. பாத்ததும் திகைத்து போன இளவரசர் வில்லியம்!!

இங்கிலாந்து பகுதியை சேர்ந்த Sylvia Ross என்ற பெண்ணுக்கு தற்போது 67 வயதாகிறது. இவரது தந்தையான ஜான் தாமஸ் என்பவர், கடந்த 1979 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனையடுத்து, கவுண்டி டர்ஹாம் பகுதியை அடுத்த பிஷப் ஆக்லாந்து அருகே அமைந்துள்ள விட்டன் பார்க் கல்லறையில் ஜான் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

தொடர்ந்து, கடந்த 43 ஆண்டுகளாக சில்வியா ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் என அனைவரும் ஜான் தாம்ஸ் கல்லறைக்கு தவறாமல் சென்று வருவதை வழக்கமாக கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான் அதிர வைக்கும் தகவல் ஒன்று, சில்வியாவின் குடும்பத்தினரை வந்து சேர்ந்துள்ளது. அதாவது, இத்தனை ஆண்டு காலம் தந்தையின் கல்லறை என நினைத்து சில்வியா சென்று வந்த கல்லறை அவருடையது இல்லை என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல்.

பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தான் கல்லறையில் உள்ள பெயர் பலகை, கவுன்சில் மூலம் தவறாக வைக்கப்பட்டுள்ளது என்பதை சில்வியாவின் குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர். மேலும் ஜான் தாமஸ் கல்லறை, அங்கிருந்து ஒரு சில அடி தூரத்தில் இருந்துள்ளது என்பதையும் கண்டுடிபிடித்துள்ளனர். இது பற்றி பேசும் சில்வியாவின் மகள், "நான் எனது தாத்தாவை சந்தித்ததே இல்லை. ஆனால், எனது தாய், 43 வருடங்களாக அவரது கல்லறை என கருதி சென்று வரும் நிலையில், உண்மையை அறிந்ததும் ஒரு கணம் உடைந்து போய் விட்டார்" என குறிப்பிட்டுள்ளார்.

family discover they have been visiting wrong grave of his dad for 43

மேலும், நினைவு தினம், கிறிஸ்துமஸ், தந்தையர் தினம் என அனைத்து நாட்களிலும் தவறாமல் தந்தை கல்லறை என கருதி சென்று வந்த சில்வியா, மறுபக்கம் கேட்பாரற்று கிடந்த தந்தையை நினைத்து அதிக மன வேதனை அடைந்துள்ளார். இனிமேல் தனது தந்தையின் கல்லறையை சரியாக அடையாளம் காணும் படி, ஒரு குறிப்பு வைக்கவும் கவுன்சிலை சில்வியா அறிவுறுத்தி உள்ளார்.

43 ஆண்டுகளாக தந்தை என நினைத்து அடையாளம் தெரியாத நபரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி வந்த குடும்பத்தினர் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "இதுக்கு தான் வாழ்நாள் மொத்தமா காத்திருந்தேன்".. 81 வயதில் முதல் முறையாக சகோதரியை சந்தித்த முதியவர்.. மனம் உருகும் பின்னணி!!

Tags : #FAMILY #DISCOVER #WRONG GRAVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Family discover they have been visiting wrong grave of his dad for 43 | World News.