"தயவு செஞ்சு PRIVACYக்கு மதிப்பு குடுங்க".. வைரல் ஆன வீடியோ.. கொந்தளித்த கோலி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Oct 31, 2022 12:29 PM

டி 20 உலக கோப்பைக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Virat kohli reaction on leaked video of his hotel room

Also Read | 140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்திருந்தார். அதே போல, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார் விராட் கோலி. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி பகிர்ந்துள்ள வீடியோவும் அது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள கேப்ஷனும் கடும் சர்ச்சையை கிரிக்கெட் வட்டாரத்தில் உருவாக்கி உள்ளது.

Virat kohli reaction on leaked video of his hotel room

ஆஸ்திரேலியாவில் இருக்கும் விராட் கோலியின் ஹோட்டல் அறை தொடர்பான வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாக ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலானதை அறிந்த விராட் கோலி கடுமையாக கொந்தளித்து போனதாக தெரிகிறது. அவர் இல்லாத நேரத்தில் அவரது அறை தொடர்பான வீடியோவை யாரோ எடுத்து பகிரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Virat kohli reaction on leaked video of his hotel room

இது தொடர்பாக தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள கோலி, "ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகம் அடைவதையும் நான் புரிந்து கொள்கிறேன். அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இந்த வீடியோ என்னை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதே வேளையில் எனது தனி உரிமை குறித்த அவமதிப்பிற்கும் பொருளாக உள்ளதாக நினைக்கிறேன். எனது ஹோட்டல் அறையில் எனக்கு தனி உரிமை இருக்க முடியாவிட்டால் அப்போது எங்கு தான் தனிப்பட்ட இடத்தை நான் எதிர்பார்க்க முடியும்?. இந்த வகையான தனியுரிமை ஆக்கிரமிப்பு எனக்கு சரியாக படவில்லை. தயவு செய்து ஒருவரின் தனி உரிமைக்கு மதிப்பளிக்கவும். அவர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம்" என தன்னுடைய கேப்ஷனில் கடும் கண்டனத்தை கோலி பதிவு செய்துள்ளார்.

Virat kohli reaction on leaked video of his hotel room

கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இது மிகவும் தவறான செயல் என்றும் தங்களது கருத்துக்களை விராட் கோலியின் பதிவின் கீழ் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | கேட்சை மிஸ் செய்த கோலி.. அடுத்த கணமே அஸ்வின், ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் வீடியோ!!

 

Tags : #CRICKET #VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat kohli reaction on leaked video of his hotel room | Sports News.