கூரையை பிச்சுக்கிட்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. மனுஷன் அத PRANK-னு நெனச்சிட்டாரு.. கடைசில நடந்தது தான் வெயிட்டே..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் லாட்டரியில் வெற்றிபெற்ற நபர், அதனை பிராங்க் என நினைத்திருக்கிறார். இறுதியில் லாட்டரி நிறுவனம் தகவலை தெரிவித்தவுடன் தான் அவருக்கு விஷயமே புரிந்திருக்கிறது.

லாட்டரி
அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் ஒருவர், தனக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என வந்த மின்னஞ்சலை பார்த்துவிட்டு, அதனை யாரோ விளையாட்டுக்காக செய்கிறார்கள் என நினைத்திருக்கிறார். அதன்பிறகு, லாட்டரி நிறுவனமே உண்மையை விளக்கியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர், சமீபத்தில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதனை ஸ்கேன் செய்தபோது அவருக்கு பரிசு கிடைக்கவில்லை. அதன்பிறகு தனது அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப்போனார் அவர். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதில் அவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 82 லட்ச ரூபாய்) பரிசு கிடைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
பிராங்க்
இதனால் குழம்பிப்போன அவர் தன்னுடைய நண்பர்கள் சிலர் விளையாட்டுக்காக இப்படி செய்திருக்கலாம் என நினைத்திருக்கிறார். ஆனால், அந்த மின்னஞ்சலில் லாட்டரி நிறுவனத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருப்பதை உணர்ந்த அவர், அந்நிறுவனத்துக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார். அப்போது, அவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்திருப்பதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர்,"லாட்டரியில் எனக்கு ஜாக்பாட் அடித்ததாக மின்னஞ்சல் வந்தது. கல்லூரி கால நண்பர்கள் சிலர் இப்படி விளையாடுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், உண்மையாகவே நான் லாட்டரியில் வெற்றிபெற்றதை நிறுவனம் மூலமாக அறிந்தேன். நான் பல வருடங்களாக லாட்டரி வாங்கி வருகிறேன். சில முறை வெற்றிபெற்றும் இருக்கிறேன். ஆனால், இந்த வெற்றி என்னால் மறக்க முடியாதது" என்றார்.
உண்மையில், அந்த நபர் $300,000,000 Diamond Riches scratch-off ticket-ஐ சமீபத்தில் வாங்கியுள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. அதேநேரத்தில், அந்த டிக்கெட்டை வாங்கியவர்களுக்கு இரண்டாம் சான்ஸ் உண்டு என நிறுவனம் முன்னரே தெரிவித்திருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இரண்டாம் முறை வெல்பவர்களுக்கு 500 டாலர் முதல் 1 லட்சம் டாலர் வரை பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படித்தான் அந்த நபருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசாக கிடைத்திருக்கிறது.
Also Read | Gp muthu : பிக்பாஸ் வீட்டில் காய்ச்சல் வந்து படுத்த GP முத்து..!! "கலகலனு இருந்த மனுஷன்".. bigg boss 6 tamil

மற்ற செய்திகள்
