இது புதுசால்ல இருக்கு.. ட்ரக்-ல இருந்த நம்பரில் லாட்டரி வாங்கிய நபர்.. கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்ங்குறது இதுதானோ.?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வித்தியாசமான முறையில் லாட்டரி எண்ணை தேர்ந்தெடுத்த நபருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இது லாட்டரி நிறுவனத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | தீபாவளி ஸ்பெஷல் சந்தை.. சரவெடியாய் விற்றுத் தீர்ந்த ஆடுகள்.. அடேங்கப்பா இவ்வளவு கோடிக்கா?
அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாக லாட்டரியில் எண்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வழிகளை கையாளுகின்றனர். சிலர் தங்களுடைய பிறந்தநாளை, அல்லது தங்களுக்கு பிடித்தமான நபர்களுடைய பிறந்தநாளில் உள்ள எண்களின் அடிப்படையில் லாட்டரி வாங்குவது உண்டு. ஆனால், அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என யார் தான் சொல்ல முடியும். அப்படித்தான் நடந்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் என்பவருக்கும்.
60 வயதான டக்ளஸ் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் வழக்கம் கொண்டவர். அதன்படி கடந்த 14 ஆம் தேதி வெளியே சென்ற அவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்குள் நுழைந்திருக்கிறார். அப்போது அங்கு லாட்டரி விற்பனை இருப்பதை அறிந்துகொண்ட அவர் தனக்கும் ஒன்று லாட்டரி வாங்க நினைத்திருக்கிறார்.
இதனிடையே லாட்டரியை வாங்கிய அவருக்கு அதில் எந்தெந்த எண்களை உள்ளீடு செய்யவேண்டும் என குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி யோசித்துக்கொண்டிருந்த அவருக்கு தனது ட்ரக்கில் உள்ள ஓடோமீட்டர் பற்றி ஞாபகம் வந்துள்ளது. 82,466 மைல் ஓடிய நிலையில் அந்த ஓடோமீட்டர் பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. அதன்படி 8-2-4-6-6 எனும் எண்களை தேர்ந்தெடுக்கலாம் என நினைத்துள்ளார் டக்ளஸ். இந்த எண்களை உள்ளீடு செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் அவர்.
அதன்பின்னர், அன்றாட வேலைகளில் அவர் மூழ்கிவிட, ஒருநாள் அவருக்கு ஒரு மெயில் வந்திருக்கிறது. அதை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருக்கிறார் டக்ளஸ். அவர் வாங்கிய லாட்டரிக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக விழுந்திருக்கிறது. ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும், கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒரு லட்ச அமெரிக்க டாலர்களையும் அவர் லாட்டரி மூலம் வென்றிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர்,"இது எனக்கு வெண்கல பதக்கம் போன்றது. ஆனாலும் நான் பெரும் மகிழ்ச்சியில் உள்ளேன். இந்தப் பணத்தினை கொண்டு நான் எனது பில்களை செலுத்த இருக்கிறேன்" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.