ரெண்டு மாத இடைவெளியில் காணாம போன பெண்கள்.. "2 பேருக்கும் கடைசியா போன் செஞ்ச ஒரே 'நபர்'??.. குலைநடுங்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாட்டரி விற்பனை செய்து வந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து மாயமான நிலையில், போலீசார் விசாரணையில் தெரிய வந்த விஷயம், கேரளாவையே கதிகலங்க வைத்துள்ளது.

Also Read | எகிறிய ஹார்ட் பீட்.. ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெண்ணுக்கு தெரிய வந்த "இனிப்பான" செய்தி.!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த ரோஸ்லின் அங்கே லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், தமிழகத்தின் தருமபுரியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணும் ரோஸ்லின் லாட்டரி விற்பனை செய்து வந்த இடத்திற்கு அருகே லாட்டரி விற்பனையை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சில மாதங்கள் இடைவெளியில், ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இரண்டு பெண்களும் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகிய இருவரது வீட்டாரும் தனித்தனியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வந்த போலீசார், ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் செல்போன் எண் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அப்போது, இருவரின் செல் போன் எண்களும் கடைசி சிக்னலாக பத்தனம்திட்டா அருகேயுள்ள திருவல்லா என்ற பகுதியை காட்டி உள்ளது.
இதனைத் தொடர்ந்து ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் மொபைல் எண்ணில் கடைசியாக முகம்மது ஷபி என்ற ஒரே நபர் பேசி இருப்பதும் தெரிய வந்தது. முகமது ஷபி என்ற நபரை தேடிப் பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர் சொன்ன தகவல், உச்சகட்ட அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங். இவரது மனைவி பெயர் லைலா. பகவல்சிங்கிற்கு அதிக பண பிரச்சனைகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவற்றில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்பதற்கு போலி சாமியாராக வலம் வந்த முகமது ஷபி, ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார்.
லாட்டரி விற்பனையில் தனக்கு அறிமுகமாகி இருந்த ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரிடம், பூஜை ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படி செய்தால் அதிக பணம் தருவதாகவும் கூறி பகவல் சிங் வீட்டிற்கு அவர்கள் இருவரையும் முகமது ஷபி அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், அங்கே வைத்து பலி கொடுத்து பகவல் சிங் பிரச்சனை தீரும் என்ற பெயரில் இப்படி செய்துள்ளார் முகமது ஷபி.
இதனையடுத்து, இருவரின் உடல்களையும் அங்கேயுள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, இரு மாத இடைவெளியில் தனித்தனியாக ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோர் பலி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர், முகமது ஷபி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாட்டரி விற்பனை செய்து வந்த பெண்கள் பலி கொடுக்கப்பட்டுள்ள விஷயம், கேரளாவை குலைநடுங்க வைத்துள்ளது.
Also Read | 5 வருசமா காதலிச்சிட்டு வந்த ஜோடி.. "கடைசியா காதலன் சொன்ன விஷயத்த கேட்டு உடைந்த இளம்பெண்.. துயரம்!!

மற்ற செய்திகள்
