7 மாசமா கோமாவில் இருந்த பெண்ணுக்கு பிரசவம்.. தாய் மற்றும் சேயின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. நெகிழ்ச்சி பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் 7 மாதமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்திருக்கிறது. இதில் தாய் மற்றும் சேயை காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள். இது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பலரையும் நெகிழ செய்திருக்கிறது.
Also Read | "4 மணி நேரமா ரிப்ளை வரல".. சந்தேகமடைந்த தோழி செஞ்ச வினோத காரியம்.. இதுவல்லவோ FRIENDSHIP..
அந்த விபத்து நடந்தபோது ஷாபியா 40 நாட்கள் கர்ப்பிணியாக இருந்தார். 23 வயதே ஆன ஷாபியா உடனடியாக புலந்ஷர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மேல்சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள trauma centre-ல் சிகிச்சை பெற்றுவந்த ஷாபியாவுக்கு 4 நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 18 வது வார கர்ப்பத்தின் போது ஷாபியாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவருடைய குழந்தை நலமுடன் இருப்பதை மருத்துவர்கள் அறிந்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ஷாபியாவுக்கு பிரசவம் நடைபெற்றிருக்கிறது. இயற்கையான முறையில் அவருக்கு குழந்தைப்பேறு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும், ஷாபியாவுக்கு நினைவு வர 10 - 15 சதவீத வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"அவரது கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், தாய் சுயநினைவின்றி இருப்பதால், கர்ப்பம் குறித்து நிறைய விவாதங்கள் நடத்தப்பட்டன. தொடர் நிலை 2 அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் கருவில் பிறவி முரண்பாடுகள் எதுவும் கண்டறியப்படாததால், குடும்பத்திற்கு கர்ப்பத்தைத் தொடர மருத்துவக் குழு பரிந்துரைத்தது" என்றார்.
மேலும் இதுபற்றி பேசிய அவர்,"தாயின் நிலையைக் கருத்தில் கொண்டு கர்ப்பத்தை கலைக்கும் முடிவை குடும்பத்தாரிடம் விடப்பட்டது. அப்போது கர்ப்பத்தை தொடர குடும்பத்தினர் முடிவு செய்தனர். இது மிகவும் அசாதாரணமானது. எய்ம்ஸில் எனது 22 ஆண்டுகால நரம்பியல் அறுவை சிகிச்சை வாழ்க்கையில் இதுபோன்ற வழக்குகள் எதையும் நான் சந்தித்ததில்லை" என்றார்.
Also Read | 140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!