காதலியை பிரிஞ்ச இளைஞர்.. அடுத்த கொஞ்ச மாசத்துல நண்பர் சொன்ன விஷயம்.. "அத கேட்டதும் ஏன்டா BREAK UP பண்ணோம்ன்னு ஆயிடுச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 02, 2022 06:23 PM

வாலிபர் ஒருவர் தனது காதலியிடம் இருந்து பிரிந்த நிலையில், அடுத்த சில மாதங்கள் கழித்து நடந்த சம்பவம், அவரை கடும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

man breakup with his girlfriend her family won millions in lottery

Also Read | "77 வருஷம் ஆச்சு என் தம்பி'ய பாத்து".. ஒரு வயதில் பிரிந்த சகோதரன்.. இத்தனை வருஷம் கழிச்சு நடக்க போகும் அற்புதம்!!

Wales பகுதியில் வாழ்ந்து வருபவர் Daniel White. இவர் தன்னுடைய பள்ளிப் பருவம் முதலே Courtney Davies என்ற பெண்ணுடன் நட்பாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், பல ஆண்டுகள் பழக்கம் காரணமாக டேனியல் மற்றும் கோர்ட்னி ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

man breakup with his girlfriend her family won millions in lottery

Image Credits : Wales News Service

இந்த காதல் கல்லூரி பருவத்தில் டேனியல் மற்றும் கோர்ட்னி ஆகியோருக்கு இடையே உருவானதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகள் இவர்களின் காதல் இருந்துள்ளது. அதன் பின்னர், புது நண்பர்கள் என இருவருக்கும் வெவ்வேறு விஷயங்கள் உருவாக, அவர்கள் இருவரும் பிரிந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

man breakup with his girlfriend her family won millions in lottery

Image Credits : Wales News Service

அப்படி அவர்கள் பிரிந்த அடுத்த சில மாதத்தில் நடந்த சம்பவத்தால் ஏன் காதலியை பிரேக் அப் செய்தோம் என்று வேதனைப்பட்டார் டேனியல். தற்போது 27 வயதாகும் டேனியல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தனது பிரேக் அப்பிற்கு பிறகு நிகழ்ந்த சம்பவத்தை தற்போது நினைவு கூர்ந்துள்ளார். அதாவது, காதலி கோர்ட்னியை பிரிந்த அடுத்த சில மாதத்தில் மிகப் பெரிய அதிர்ஷ்டம் காதலியின் குடும்பத்திற்கு அடித்துள்ளது.

கோர்ட்னியின் சகோதரி லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு சுமார் 61 மில்லியன் பவுண்டுகள் பரிசுத் தொகையாக விழுந்துள்ளது. இந்த தகவலை டேனியலின் நண்பர்கள் சிலர், அவருக்கு அழைத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் மட்டுமில்லாமல், தனது காதலியை பிரிந்ததாக டேனியலை அவரது நண்பர்கள் கிண்டல் செயத்துடன் நல்ல வாய்ப்பை இழந்து விட்டாய் என்றும் கூறி உள்ளனர்.

man breakup with his girlfriend her family won millions in lottery

Image Credits : Wales News Service

கோர்ட்னியின் குடும்பத்தினர், லாட்டரியில் ஜெயித்த பணத்தினை உறவினர்களுடன் பங்கு போட்டு பிரித்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி பேசும் டேனியல், "முன்னாள் காதலியின் குடும்பத்தினர் லாட்டரியில் மிகப் பெரிய பரிசுத் தொகை வென்றதும் என் தலையில் நான் கையை வைத்தேன். அவர்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், அங்கு நான் இருந்திருக்க வேண்டும் என உணர்கிறேன்" என கூறி உள்ளார்.

காதலியை பிரிந்த அடுத்த சில மாதங்களில், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகப் பெரிய பரிசுத் தொகையை லாட்டரியில் வென்றதும், இதனால் ஒட்டு மொத்தமாக நொந்து நூடுல்ஸ் ஆன இளைஞரின் கதையும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மகனுடன் கிரிக்கெட் ஆடும் ரெய்னா.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ.. நடிகை ஸ்ருதிஹாசன் போட்ட கமெண்ட்!!

Tags : #MAN #BREAKUP #GIRLFRIEND #FAMILY #LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man breakup with his girlfriend her family won millions in lottery | World News.