"PROMOTION கிடைக்காம போனதுக்கா இப்டி பண்ணாரு".. 8 வருசத்துக்கு முன்னாடி நடந்த பயங்கரம்.. DNA'வால் சிக்கிய நபர்!!
முகப்பு > செய்திகள் > உலகம்எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் ஹூஸ்டன் என்னும் பகுதியில் ஒரு குடும்பம் படு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இதற்கான காரணம் பற்றி இத்தனை ஆண்டுகளுக்கு பின் உண்மை தெரிய வந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில், மாயோ சன் என்ற நபர், அவரது மனைவி மீக்ஸி சன் மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் வீட்டில் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
வீட்டின் படுக்கை அறை உள்ளிட்ட பல இடங்களில் அவரது உடல்கள் கிடந்த நிலையில், இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று படுகொலை சம்பவத்தின் பின்னணி தொடர்பான காரணம் என்ன என்பதை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தெரிய வந்துள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ஃபாங் லு என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
58 வயதான ஃபாங் லு என்பவரின் மேலதிகாரியாக மாயோ சன் இருந்து வந்துள்ளார். அப்போது ஃபாங் லுவை பதவி உயர்வுக்கு மாயோ சன் பரிந்துரைக்கவில்லை என கூறப்படுகிறது. தான் பணிபுரிந்து வந்த பிரிவில் இருந்து வேறு பிரிவுக்கு மாற ஆசைப்பட்ட ஃபாங் லு, தன்னை பற்றி நல்ல விதமாக நிறுவனத்திடம் பேசும் படியும் மாயோயிடம் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மாயோ அதனை செய்யாமல், ஃபாங் லு குறித்து சக ஊழியர்களிடம் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. தனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் விரக்தியில் இருந்த ஃபாங் லு, கோபத்தில் மாயோ சன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், தான் எதுவும் செய்யவில்லை என ஃபாங் தெரிவித்து வந்துள்ளார். மேலும், தான் கோபமாக இருந்ததை அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்ட ஃபாங் லு, தான் கொலை செய்யவில்லை என மறுத்து வந்துள்ளார். ஆனால், மாயோ சன் வீட்டில் எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் ஃபாங்குடன் பொருந்தியதால், அவர் கொலை செய்தது உறுதியானது. ஆனால், டிஎன்ஏ முடிவுகள் வரும் நேரத்தில், சொந்த ஊரான சீனாவுக்கு சென்று விட்டார் ஃபாங் லு.
இதனால், அவரை கைது செய்ய முடியாது என அதிகாரிகள் கருதிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கலிபோர்னியா விமான நிலையம் வந்த ஃபாங் லுவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குடும்பத்தையே கொலை செய்ததற்காக 8 ஆண்டுகள் சிக்காமல் இருந்த குற்றவாளி, தற்போது சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
