'நாங்க நிம்மதியாவே இருக்க கூடாது இல்ல?'.... 'ஆகஸ்ட் மாதம் காட்ட போகும் ருத்திர தாண்டவம்'... பரிதவிப்பில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா ருத்திர தாண்டவம் ஆடி வரும் நிலையில், புதிதாக வெளியாகியுள்ள கணிப்பு அவர்களை மேலும் அச்சத்தில் தள்ளியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் சென்று கொண்டே செல்கிறது. தற்போது வரை அங்கு 14 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ளார்கள். பலி எண்ணிக்கை என்பது 83 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் ஆகஸ்டு மாத தொடக்கத்தின்போது, கொரோனா வைரசுக்கு பலியாவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரம் ஆக உயரும் என புதிய கணிப்பு வெளியாகி உள்ளது.
வாஷிங்டன் நகரில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு இன்ஸ்டிடியூட் இந்த கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. முதலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 475 பேர் பலியாவார்கள் என கடந்த வாரம் கணித்திருந்த நிலையில், தற்போது புதிய கணிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது அங்குள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் எப்போது தான் நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று, தனது உச்ச நிலையை கடந்து விட்டதாக டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது. மாகாணங்களில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
