"நாடு முழுவதும் ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!".. ''ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு.." - ரயில்வே அமைச்சகம் புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 14, 2020 11:01 AM

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

tickets booked for travel on or before June 30 cancelled, Railway

ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என்றும் ஜூன் 30ந் தேதி வரை ரயில் பயணத்திற்கு மேற்கொள்ளப்பட்ட முன்பதிவு அனைத்தும் ரத்து செய்யப்படுவதால், ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தவிர, ஜூன் 30ந் தேதி வரை சிறப்பு ரயில்கள் மற்றும் ஷர்மிக் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.