தொடர் 'ஊரடங்கால்'... கொரோனா அச்சுறுத்தலிலும் 'சென்னைக்கு' விளைந்துள்ள 'பெரும்' நன்மை!...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 14, 2020 01:34 PM

சென்னையில் காற்று மாசு வழக்கத்தைவிட 35 சதவிதம் குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  தெரிவித்துள்ளது.

Chennai Air Pollution Is Down By 35% Over PreLockdown Levels

சென்னையில் கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 21 வரையிலும், மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரையிலும் கணக்கிடப்பட்ட அளவுகளின் படி நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவு 5 முதல் 43% வரை குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது .

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வாகன இயக்கமும், தொழிற்சாலைகள் இயக்கமும் இல்லாமல் இருப்பதே காற்று மாசு குறைவுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றில் பரவியிருந்த கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை தேசிய சுற்றுப்புற காற்று தர நிர்ணயங்களுக்குள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.