"ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர்தான்!".. 'கொரோனா வார்டில்' சிகிச்சை பெறும் நிலையிலும் சோர்வடையாத 'அறப்பணி!'.. கண்கலங்க வைக்கும் நிகழ்வு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் உலகமே ஸ்தம்பித்துக் கிடந்திருந்த நிலையில், இனி கொரோனா முழுவதுமாக நம்மை விட்டு நீங்க ஓராண்டு காலம் கூட ஆகலாம் என்கிற தகவல்கள் வெளியானதை அடுத்து, உலகமே கொரோனாவுடன் வாழப் பழகும் இயல்புக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மூத்த வயோதிகர்களை குறிவைக்கும் இந்த கொரோனா வைரஸ், பிற வயதினரையும், பிறந்த குழந்தையையும் கூட விட்டு வைப்பதில்லை. எனினும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக விலகல், தனிமனித இடைவெளி, சுத்த சுகாதாரங்களை உலகம் முழுவதுமுள்ள நாடுகள் வலியிறுத்துவதால், அனைவரும் அதற்கும் பழகுகின்றனர்.
இதற்கென சில நாட்கள் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கங்களால் கல்வி, வேலை, பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்பட்டன. இதில் முதன்மையானதாக இருக்கும் கல்வி எக்காரணத்தைக் கொண்டும் தடைபடக் கூடாது என்பதால் இணையவழியில் பாடம் நடத்துவதை உலகநாடுகள் தொடர்ந்தன. இந்தியாவிலும் தற்போது இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் லாகூரின் லே எனும் பகுதியில் ஆசிரியர் கிஃபாயத் ஹூசைன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆனால் தனது கொரோனா நோய்த்தொற்று எவ்விதத்திலும் மாணவர்களின் கல்வியை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக, கணித ஆசிரியரான இவர் கொரோனா வார்டில் இருந்தபடியே வீடியோ மூலம் போர்டில் எழுதி பாடம் நடத்தி வருகிறார்.