'127 நாடுகளுக்கு' மருந்து வழங்கப் போகும் 'இந்தியா'!.. 'கொரோனா' பலி 3 லட்சத்தை நெருங்கிய நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் 'அதிரடி முடிவு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் 4 கம்பெனிகளுக்கு அமெரிக்காவின் ஜில்லியாட் நிறுவனம், லைசன்ஸ் அல்லாத ரெம்டெசிவிர் மருந்தினை பேட்டண்ட் இல்லாமலே உருவாக்கிக் கொள்வதற்கான கூடு ஒப்பந்தத்தை செய்து தந்துள்ளது.
ஜூபிலியண்ட் லைஃப் சைன்ஸஸ். சிப்லா, ஹெட்ரோ லேப்ஸ், மைலன் என்.வி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் சுமார் 127 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான மருந்தை இந்தியாவின் 4 கம்பெனிகளுக்கும் பாகிஸ்தானின் ஒரு கம்பெனி உட்பட 5 கம்பெனிக்கும் ஜில்லியாட் சைன்ஸஸ் கொரோனாவுக்கு எதிரான மருந்தினை உருவாக்கும் வாய்ப்பினை அளித்துள்ளது.
குறிப்பாக உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 பாதிப்பினை உலக தொற்றாக அறிவித்தது முதல் முடித்துக்கொள்ளும் வரையில் இந்த ரெம்டெவிசர் மருந்துக்கான ராயல்டியினை பெறப்போவதில்லை என ஜில்லியாட் அறிவித்துள்ளது. உலகில் இதுவரை கொரோனா தொற்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், இப்படியான அறிவிப்பினையும் முனைப்பினையும் ஜில்லியாட் கையில் எடுத்துள்ளதும், இத்தகைய கொடிய நோய் சிகிச்சைக்கான மருந்தினை இந்திய கம்பெனிகளுக்கு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.