'இதெல்லாமா 'வாட்ஸ் அப்'ல அனுப்புறது' ...காண்டான 'மனைவி'... 'போலீஸ் வலையில் கணவன்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 17, 2019 01:31 PM

வாட்ஸ் அப் மூலம் மனைவிக்கு முத்தலாக் அனுப்பிய கணவனை,காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Man, parents booked for giving triple talaq to wife over WhatsApp

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்.இவருக்கும் அதே பகுதியை சென்ற பெண்ணிற்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கும் நிலையில்,கடந்த சில வருடங்களாக பிறந்தவீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு,ஷேக்கும் அவரது பெற்றோரும் அந்த பெண்ணை கடுமையாக சித்திரவதை செய்து வந்துள்ளார்கள்.இதனால் அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தனது உறவினர்கள் வீட்டில்,அந்த பெண் தங்கியிருந்தார்.

இந்நிலையில் பணம் தொடர்பாக மீண்டும் ஷேக்கிற்கும் அவரது மனைவிக்கும் வாட்ஸ் அப்பில் பிரச்னை வெடித்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஷேக்வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் முத்தலாக் கூறியுள்ளார்.இதனிடையே கணவனின் மெசேஜை கண்டு அதிர்ந்து போன அந்த பெண்,இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர்,முஸ்லீம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஷேக் மீதும் அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தலைமறைவாகியுள்ள ஷேக்யை கைது செய்ய,காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வாட்ஸ் அப் மூலம் கணவர் முத்தலாக் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #WHATSAPP #MUMBAI #TRIPLE TALAQ