'வாட்.. நானா? யார்ரா இந்த வேலைய பாத்தது'.. தூங்கி எழுவதற்குள் வாட்ஸ்-ஆப்பில் நடந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 26, 2019 03:34 PM
மும்பையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பணிபுரியும் இடத்தில் விடுப்பு சொல்லிவிட்டு, மனைவி குழந்தைகளுடன் உற்சாகமாக வெளியூர் சென்றபோதுதான் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
43 வயதான ரவீந்தர் துசாங்கே என்கிற ஊடகவியலாளர் மும்பையில் உடனுக்குடன் தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு கடத்தும் ஒரு பொது ஜன மீடியாவுக்குள் பணிபுரிபவர். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் ஓரிரு நாட்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் என நினைத்து, வெளியூச் சென்றுள்ளார். அங்கு சென்று விடிந்து எழுந்து, போனை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் ஒரு வாட்ஸ்-ஆப் மெசேஜ் வந்திருந்துள்ளது. அதை ஓபன் செய்து பார்த்த ரவீந்தர் துசாங்கேவுக்கு பெரிய அதிர்ச்சி. அதில் ரவீந்தர் துசாங்கே இறந்துவிட்டதாக, அவர் புகைப்படத்துடன் கூடிய இரங்கல் செய்தி எல்லா குழுவிலும் ஃபார்வேர்டு செய்யப்பட்டிருந்தது.
இதென்னடா சோதனை என்று ஒன்றும் புரியாமல், இதுபற்றி யாரிடமாவது விசாரிக்க முயற்சிப்பதற்குள் பலதரப்பட்டவர்களுக்கும் ரவீந்தர் துசாங்கே இறந்துவிட்டதாக செய்திகள் சென்றிருக்கின்றன. அதில் ரவீந்தரின் சோஷியல் மீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்துள்ளன. அதற்குள் ரவீந்தரின் சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் இருந்து போன் கால்கள் வரத் தொடங்கின. ஆனால் அவரோ ஒவ்வொருவரிடமும், தான் நன்றாகத்தான் உள்ளதாகவும், வாட்ஸ்-ஆப்பில் வந்த செய்தி வதந்தி என்றும் விளக்கம் தந்தார். ஆனால் கடைசிவரை இந்தத் தகவல் தன் அம்மாவுக்கு தெரிந்தால் மிகவும் வேதனைப்படுவார் என்று, அவருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அதன் பிறகு ரவீந்தரின் சகோதரர் போன் செய்து, இதுபற்றி பேசியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், பிரிவு 66ஏ படி இதெல்லாம் ஐடி குற்றங்களில் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளதோடு, ரவீந்தரின் வாட்ஸ்-ஆப் தொடர்புகளை யாரோ ஹேக் செய்து இவ்வாறு செய்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கருதுகின்றனர்.