‘இனி வாட்ஸ் அப்ல இத செய்ய முடியாது’.. வருகிறது அதிரடியான சில மாற்றங்கள்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Jun 01, 2019 10:50 PM

வாட்ஸ் அப் செயலில் சில மாற்றங்கள் செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp may soon stop the ability to save others profile picture

வாட்ஸ் அப் செயலி தகவல் பரிமாற்றம் தொழில்நுட்ப வசதியில் உலகம் முழுவதும் முக்கிய பங்காற்று வருகிறது. கடந்த 2014 -ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை விலைக்கு வாங்கியது. இதில் இருந்து வாட்ஸ் அப் செயலில் சில மாற்றங்கள் வரத்தொடங்கின.

இதனிடையே வாட்ஸ் அப் செயலி மூலம் அதிக குற்றச்செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் வரத்தொடங்கியது. இதனால் ஒரு நேரத்தில் ஒரு தகவலை ஐந்து பேருக்கும் மட்டும்தான் பகிர முடியும் என சில கட்டுப்பாடுகள் வாட்ஸ் அப் கொண்டுவந்தது. மேலும் சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக தகவலை அடுத்து, வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்துகொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் வாட்ஸ் அப் புரோபைல் போட்டோவை மற்றவர்கள் தரவிறக்கம் செய்யமுடியாத வகையில் சில மாற்றங்கள் வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாய்ஸ் மெசேஜ், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் சில மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிகிறது.

Tags : #WHATSAPP