'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு'.. சரிசெய்யப்பட்ட #FACEBOOKDOWN பிரச்சனை!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | Jul 03, 2019 10:39 PM

திடீரென வாட்ஸ் ஆப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பயனாளர்கள் அவதிப்பட்டு வரும் நிலை உருவானதற்கான காரணம் தெரியாமல் பலரும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

Facebook down and Whatsapp, instagram are not showing photos

உலகம் முழுவதும் ஒவ்வொரு மைக்ரோ செகண்ட்டும் இணையத்துடன், குறிப்பாக வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். காலையில் கண் விழித்தவுடன் முதல் வேலையே, இந்த கணக்குகளின் அப்டேட்டுகளை பரிசோதிப்பதுதான் என்கிற நிலையில் பலர் உள்ளனர்.

அதனால், இந்த சமூக வலைதளங்களில் ஒரு வினாடி செயலிழந்துவிட்டாலே, உலகம் ஸ்தம்பித்துவிடும் என்கிற அளவுக்கு, கையும் காலும் ஓடவில்லை என்கிற உணர்வுக்கு பலகோடி பயனாளர்கள் தவிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அப்படித்தான் இந்தியா, தமிழகம் உட்பட தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைதளங்கள் திடீரென சரிவர இயங்காமல் சிக்கலில் உள்ளன.

இதன் காரணமாக புகைப்படங்கள் அப்லோடு செய்வதிலும், டவுன்லோடு செய்வதிலும், அப்லோடு செய்யப்பட்டு புகைப்படங்கள் டிஸ்ப்ளே ஆவதிலும் பயனாளர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விசாரித்ததில், இந்த சமூக வலைதளங்கள் அப்டேட் செய்யப்பட்டு வருவதாகவும், இவை அடுத்த 24 மணி நேரத்துக்குள் இந்த சிக்கலில் இருந்து மீளலாம் என்றும் தெரிகிறது.

Tags : #FACEBOOK #WHATSAPP #INSTAGRAM #SOCIALMEDIA