வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! வரப்போகும் புதிய அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Jul 31, 2019 06:07 PM

வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்பேட் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp to allow use of one account on multiple phones

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. முன்னதாக வாட்ஸ் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய உள்ளதாக பரவிய தகவலை அடுத்து பயனாளர்களை உடனே அப்டேட் செய்து கொள்ளுமாறு வாட்ஸ் அப் நிறுவனம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் வாட்ஸ் அப் கணக்கை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், multi-platform support என்ற வசதியின் மூலம் வாட்ஸ் அப் கணக்கு பயன்பாட்டில் இருக்கும் ஒரு மொபலுக்கு verification code அனுப்பப்படும்,  அதனை பயன்படுத்தி அதே வாட்ஸ் அப் கணக்கை மற்றொரு மொபைல் போனில் பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட் விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.